Sunday, November 7, 2010
Sunday, August 1, 2010
Saturday, July 31, 2010
வீட்டிற்குப் போ!
வழிகாட்டி!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் மகத நாட்டு கிராமம் ஒன்றில் மாகதன் என்ற சத்திரியனாகப் பிறந்தார். அந்த கிராமத்தில் ஊரார் கூடிப் பேசப் பொது இடம் இருந்தது. அக்கிராமத்து ஐம்பது குடும்பத் தலைவர்களும் ஒன்று கூடித் தம் பிரச்னைகள் பற்றிப் பேசிக் கொள்வார்கள். நேர் வழியில் செல்லாமல் திருட்டு, கொலை முதலிய குற்றங்களைச் செய்வதோடு தம்மைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க கிராம அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்து வந்தார்கள்.
அக்கூட்டத்தில் சேராமல் தனியாகத் தான் உட்கார மாகதன் இடம் ஒதுக்கிய போதெல்லாம்ம், மற்றவர்கள் அதனை ஆக்கிரமித்துக் கொண்டனர். அதனால் அந்தப் பொது இடத்தில் அல்லாமல் சிறிது தூரம் தள்ளி ஓரிடத்தை சுத்தம் செய்து சிறிய பந்தல் போட்டான். அங்கு நிழல் இருக்கவே எல்லாரும் அங்கு வரலாயினர். மாகதன் சொல்வதைக் கேட்கலாயினர். அவனைத் தம் தலைவனாகவும் ஏற்றனர்.
இவ்விதமாக மாகதன் அவர்களை நல்ல வழியில் திருப்பினான். தம் ஊரைச் சுத்தமாக வைத்து பல வசதிகளை ஊராரின் ஒத்துழைப்புடன் செய்தான். யாவரும் ஒன்று கூடிப் பேச ஒரு பெரிய அரங்கத்தையும் கட்டினான். அங்கு குடிக்க நீரும், படிக்க நூல்களும் வைத்தான். ஐம்பது குடும்பத்தவரும் திருந்தி நல்வாழ்க்கை மேற்கொண்டனர். திருடுவது, கொள்ளையடிப்பது, கொலை புரிவது போன்றவற்றை அறவே விட்டு விட்டார்கள். எப்போதும் மண் வெட்டி, கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவற்றை அவர்கள் எடுத்து பாதையில் தடங்கலாக உள்ள மரங்களை வெட்டி நிலத்தைச் சமப்படுத்தி வரலானார்கள்.
அதனால் அவன் நேராக மன்னனிடம் போய் “அரசே! என் ஊரில் அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் விளைவிக்க முயற்சி நடக்கிறது. இக்கலக்காரர்களின் தலைவன் மாகதன் என்பவன் ஆவான்.
அவனது பெரும்பாலான ஆட்கள் எந்நேரமும் கோடரியும் கடப்பாரையும் சம்மட்டியும் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். தாங்கள் தாம் இந்தக் கலகக்காரர்களைப் பிடித்து தண்டிக்க வேண்டும்” எனப் பொய்ப் புகார் கொடுத்தான். அரசனும் அவன் கூறியதை நம்பி, உடனே தன் வீரர்களிடம் “இவரோடு கிராமத்திற்குப் போய் அங்கு கோடரி, கடப்பாரை, சம்மட்டி ஆகியவை எடுத்துக் கொண்டு திரிபவர்களைப் பிடித்து இழுத்து வாருங்கள்” என்றான்.
வீரர்களும் அவ்வாறே அக்கிராமத்திற்குப் போய் கோடரி, கடப்பாரை சம்மட்டிகளுடனும் திரிந்த யாவரையும் பிடித்து வந்தனர். அவர்களில் மாகதனும் ஒருவன். அரசன் அவர்களை விசாரிக்காமலேயே தன் காவலர்களிடம் “இந்தத் துரோகிகளை யானையின் கால்களுக்கு அடியே போட்டு மிதிக்கச் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டான்.
“அவர்கள் யானைகள் தம்மிடம் வராதிருக்க ஏதாவது தாயத்து கட்டிக் கொண்டிருப்பார்கள் போலிருக்கிறது. அவர்களைச் சோதனை போட்டு தாயத்துகளை அகற்றி விட்டு யானைகளை அவர்களின் மீது ஏவுங்கள்” என்று மன்னன் கட்டளையிட்டான். ஆனால் வீரர்கள் சோதனை போட்டுப் பார்த்ததில் யாரிடமும் ஒரு தாயத்து கூட இருக்கவில்லை. அதைக் கூறவே மன்னன் “சரி. அவர்களை எல்லாம் என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்” என்றான். வீரர்களும் அவர்களை மன்னன் முன் கொண்டு வந்து நிறுத்தினார்கள். மன்னனும் “உங்களுக்கு யானைகளைக் கட்டுப்படுத்தும் மந்திரம் ஏதாவது தெரியுமா?” என்று கேட்டான். அதற்கு மாகதன் “அரசே எங்களுக்கு ஒருவித சக்தி வாய்ந்த மந்திரம் தெரியும். ஆனால் அது நீங்கள் நினைக்கும் சக்தியுள்ள மந்திரம் அல்ல” என்றார். “அதென்ன அதிசய மந்திரம்?” என்று மன்னன் கேட்கவே மாகதனும் “எங்களில் ஒருவர் கூட எந்தவொரு உயிருக்கும் தீங்கு இழைக்க மாட்டோம். பொய் பேச மாட்டோம். போதை தரும் பொருள்களைச் சாப்பிட மாட்டோம். ஜீவராசிகளிடம் அன்பு செலுத்துகிறோம். பிறருக்கு உதவுகிறோம். பாதைகளைச் செப்பனிட்டு குளங்கள் வெட்டி சத்திரங்கள் கட்டுகிறோம். இந்த வழிகளைக் கடைப் பிடிக்கும் மந்திரம் தான் எங்களுக்குத் தெரியும்” என்றார். இதைக் கேட்ட மன்னன் ஆச்சரியப்பட்டு “இப்படி நல்ல செயல்கள் புரியும் உங்களை அந்த கிராம அதிகாரி ஏன் கலகக்கார துரோகிகள் என்று குற்றம் சாட்டினான்?” என்று கேட்டான். மாகதனும் “நீங்கள் தீர விசாரிக்காமல் அவன் கூறியதை நம்பி விட்டீர்கள்” என்றார். “நீங்கள் கோடரியும் கடப்பாரையும் எடுத்துக் கொண்டு திரிந்து மற்றவர்களை பயமுறுத்துவதாக அவன் கூறினான். உங்களிடம் இவை எல்லாம் இருக்கவே நானும் நம்பி விட்டேன்” என்றான் மன்னன். மாகதனும் “இவை எல்லாம் நாங்கள் பொதுப்பணி புரிய எடுத்துச் செல்கிறோம். யாரையும் தாக்குவதற்காக அல்ல” என்றார். மன்னன் நன்கு விசாரணை நடத்திய போது மாகதனின் முயற்சியால் அந்த ஊரார் திருந்தியதும், கிராம அதிகாரிக்கு முன்பு கிடைத்து வந்தது போல லஞ்சம் கிடைக்கவில்லை என்பதும் தெரிந்தது. பொய்க் குற்றச்சாட்டுகளைக் கூறியதோடு பல ஆண்டுகளாக லஞ்சம் வாங்கி வந்ததற்காகவும் மன்னன் அவனது சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ததோடு சிறையில் தள்ளினான். அதனை மாகதனிடமே கொடுத்து கிராமத்து நலனுக்காக உபயோகப் படுத்துமாறு கூறி “இனி மேல் நீங்கள் தாம் அந்த கிராமத்துத் தலைவர். நான் இனி எந்த அதிகாரியையும் நியமிக்கப் போவதில்லை” என்றான். அது மட்டுமல்ல தன் பட்டத்து யானையையே அவன் மாகதனுக்குக் கொடுத்து கௌரவித்தான். |
Sunday, July 25, 2010
குருவை மதிக்காத சிஷ்யன்!
பிரம்மதத்தன் காசியை ஆண்ட காலத்தில் போதிசத்வர் குத்திலன் என்ற வீணை வித்வானாக இருந்தார். அவர் தம் பதினாறாவது வயதிலேயே தமக்கு இணையாக யாராலும் வீணை வாசிக்க முடியாது என்பதைக் காட்டி விட்டார். அவரது புகழ் எங்கும் பரவி இருந்தது. இதைக் கண்ட காசி மன்னனும் அவரைத் தன் ஆஸ்தான வித்வானாக நியமித்துக் கொண்டான்.
இது நடந்து சில ஆண்டுகளுக்குப் பின் காசியிலிருந்து சில வியாபாரிகள் உஜ்ஜயினி நகருக்குத் தம் தொழில் சம்பந்தமாகச் சென்றனர். அவர்கள் குத்திலனது வீணை வாசிப்பைப் பல முறை கேட்டு ரசித்து மகிழ்ந்தவர்கள். உஜ்ஜயினியில் தம் வேலை சற்றுத் தாமதமாகும் என்பதால் சில நாள்கள் தங்கினர். அப்போது ஒரு நாள் இரவு யாரையாவது வீணை வாசிக்கச் சொல்லிக் கேட்கலாம் என அவர்கள் நினைத்தனர். யாராவது நல்ல வீணை வித்வான் இருக்கிறாரா என அவர்கள் விசாரித்த போது, பலர் மாசிலன் என்ற பெயரைக் கூறினார்கள்.
காசி வியாபாரிகள் தம் பொழுது போக்கிற்காக மாசிலனை வீணைக் கச்சேரி செய்ய அழைத்து வந்தார்கள். ஆனால் மாசிலனது வீணை வாசிப்பு அவர்களில் ஒருவரைக் கூட கவரவில்லை. அவர்கள் ரசிக்கவும் இல்லை. இதைக் கண்ட மாசிலன் “நான் இவ்வளவு நேரமாக வீணை வாசித்தது எப்படி இருந்தது?” என்று கேட்டான். அப்போது காசி வியாபாரிகளில் ஒருவன் “நீங்கள் வீணை வாசித்தீர்களா? நீங்கள் சுருதி கூட்டினீர்கள் என்றல்லவா நினைத்தேன்” என்றான்.
அதைக் கேட்ட மாசிலனின் முகம் அவமானத்தால் சுண்டியது. அவன் அவர்களிடம் “அப்படியானால் என்னை விட நன்கு வாசிக்கக் கூடிய வீணை வித்வான் இருக்கிறார் என்று தானே பொருள்” என்று கேட்டான்.
மாசிலன் அன்றே உஜ்ஜயினியை விட்டுக் கிளம்பி காசி நகரை அடைந்தான். அங்கு குத்திலனான போதிசத்வரைக் கண்டு “ஐயா! நான் உஜ்ஜயினியை சார்ந்தவன். தங்களிடம் வீணைப் பயிற்சி பெற வந்திருக்கிறேன். தங்கள் தயவு இருந்தால் தங்களைப் போல வீணை வாசிக்கும் பேறு பெறுவேன்” என்றான். போதிசத்வரும் அவனைத் தம் சீடனாக ஏற்று தினமும் வீணையில் அவனுக்குப் பயிற்சி அளிக்காலானார். மாசிலனும் குத்திலனான போதிசத்வரிடம் நன்கு வீணை கற்கலானான்.
இப்படியாக சில ஆண்டுகள் கழிந்தன. ஒரு நாள் போதிசத்வர் தம் சீடனிடம் “நீ என்னிடம் கற்க வேண்டியதெல்லாம் கற்றாகி விட்டது. இனி நீ உன் நாட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்” என்றார். மாசிலனுக்கோ உஜ்ஜயினிக்குத் திரும்பிப் போக இஷ்டமே இல்லை. காசியிலேயே அரச சபையில் உத்தியோகத்தில் அமர்வது என அவன் தீர்மானித்துக் கொண்டான். அவன் போதிசத்வரிடம் “குருவே! நான் உஜ்ஜயினிக்குப் போக விரும்பவில்லை. உங்களுக்குத் தெரிந்ததெல்லாம் நானும் கற்றுக் கொண்டு விட்டதால் உங்களோடு எனக்கும் சமஸ்தானத்தில் வித்வானாக இருக்கும் வேலையை வாங்கிக் கொடுங்கள். நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டவனாக இருப்பேன்”என்றான்.
போதிசத்வரும் மறுநாள் காசி மன்னனிடம் மாசிலனுக்கு வேலை போட்டுக் கொடுக்கும்படி கேட்டார். மன்னனும் “மாசிலன் உங்கள் சீடன் என்பதற்காகத்தான் நான் அவனை வேலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அவனுக்கு உங்களுக்குக் கிடைக்கும் சம்பளம் அளவிற்குக் கொடுக்க முடியாது. உங்களுக்கு கொடுப்பதில் பாதிதான் கொடுப்பேன். இதற்கு சம்மதமானால் அவன் இந்த வேலையை ஏற்கட்டும்” என்றான்.
அப்போது, “அரசே, இப்போது ஆஸ்தான வித்வானாக உள்ளவரின் சம்பளத்தில் பாதி கொடுத்து என்னை வேலைக்கு வைத்துக் கொள்ளவதாகக் கூறினீர்களாமே. நான் எந்த விதத்தில் அவரை விடக் குறைந்து போனேன்? அவர் எப்படியெல்லாம் வீணை வாசிக்கிறாரோ அதுபோல என்னாலும் வாசிக்கமுடியும். இது பற்றி என் குருவிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எனவே நீங்கள் எனக்கும் அவருக்குக் கொடுக்கும் அளவிற்கு சம்பளம் கொடுங்கள்” என்றான்.
மன்னனுக்கு எரிச்சலாக இருந்தது. அவன் “நீ குத்திலரின் சீடன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் உனக்கு உத்தியோகம் அளிக்கச் சம்மதித்தேன். நீ அவருக்குச் சமமான வீணை வித்வான் என நான் எப்படி நம்பமுடியும்?” என்று கேட்டான். மாசிலனும் “நீங்கள் எனக்கும் அவருக்கும் போட்டி வைத்துப் பாருங்கள். அப்போது தெரியும்” என்றான். காசி மன்னனும் அதற்கு இணங்கி ஒரு போட்டியை வைத்தான். “நீ இந்தப் போட்டியில் வென்றால் உனக்கு இங்கே உத்தியோகம் கிடைக்கும், தோற்றால் நீ இந்த நாட்டை விட்டே ஓடி விட வேண்டும்” என்றான். மாசிலனும் அதற்கு இணங்கினான்.
மறுநாளே குருவிற்கும் சீடனுக்கும் இடையே போட்டி நடந்தது. அந்த போட்டியைக் காண்பதற்காகவும், கேட்பதற்காகவும் ஏராளமானோர் கூடி விட்டார்கள். இருவரும் ஒருவரை மற்றவர் வெல்வதற்காக வீணையை வாசிக்கலானார்கள். சற்று நேரத்திற்குப் பின் போதிசத்வரின் வீணை கம்பிகளில் ஒன்று அறுந்து போகவே அவர் மூன்று கம்பிகளில் வாசிக்கலானார். அவர் ஏதோ புதிதாய் செய்கிறார் என்றெண்ணிய மாசிலன் தன் வீணையின் ஒரு கம்பியை அறுத்து விட்டு அவரைப் போல வாசித்தான்.
போதிசத்வரின் வீணையில் மேலும் இரு கம்பிகள் அறுந்து போகவே, ஒரே கம்பியில் வாசித்தார். மாசிலனும் அவரைப் பார்த்து தன் வீணைக் கம்பிகளில் இரண்டை அறுத்து விட்டு ஒரே கம்பியில் வாசித்தான். போதிசத்வரின் வீணையின் கடைசி கம்பியும் அறுந்தது. கம்பி இல்லாமலேயே வீணையிலிருந்து அவர் இனிய நாதம் கிளம்பி வரச் செய்தார்.
மாசிலனும் தன் வீணையின் கடைசிக் கம்பியை அறுத்து விட்டு வாசிக்க முயன்றான். ஆனால் அவனது வீணையிலிருந்து எவ்வித நாதமும் வரவில்லை. சபையோர் போதிசத்வரைப் பாராட்டினார்கள். மாசிலனை கேலி செய்தார்கள். குருவின் திறமை தெரியாமல் அவரை போட்டிக்கு இழுத்த மாசிலனுக்கு பெருத்த அவமானம் ஏற்பட்டது. அன்றே தன் ஊரான உஜ்ஜயினிக்குக் கிளம்பி விட்டான்.
மானிடப்பிறப்பு
அநீதி அழியும்
பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.
ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.
போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.
வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.
மக்கள் கூட்டமாகக் கூடி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். சுஜாதாவும் தானும் சற்று வேடிக்கை பார்த்து விட்டு வருவதாக தன் கணவரிடம் கூறி அவரது அனுமதி பெற்று கீழே இறங்கி ஒரு ஓரமாக நின்றாள். வண்டியிலுள்ள போதே காசி மன்னன் சுஜாதாவைப் பார்த்து அவளது அழகில் மயங்கி விட்டான். அவளை அடைந்து விடுவது என எண்ணிய போது அவள் விவாகமானவள் என்றும் அவளது கணவன் வண்டியிலுள்ள போதிசத்வர் என்பதும் அவனுக்குத் தெரிந்து விட்டது.
போதிசத்வரை எப்படியாவது ஒழித்து விட்டால் அந்த அழகிய பெண் தன்னோடு இருந்து விடுவாள் என அவன் எண்ணி அதற்கு என்ன வழி என்று யோசிக்கலானான். சட்டென ஒரு வழி அவனுக்குப் புலப்பட்டது. அவன் தன் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு வேலையாளை அழைத்து தன் தலையிலிருந்து கிடத்தை எடுத்து அவனிடம் கொடுத்து "நீ இதை அதோ தெரியும் வண்டியில் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு வா" எனக் கூறி போதிசத்வரின் வண்டியைக் காட்டி அனுப்பினான்.
அந்த வேலையாளும் போதிசத்வர் பாராது இருந்த சமயத்தில் அரசனது கிடத்தை அவரது வண்டிக்குள் வைத்து விட்டான். இதற்குள் சுஜாதா அரசன் தன்னையே உற்று உற்றுப் பார்ப்பதைக் கண்டு வெட்கப்பட்டு தலையைத் திருப்பிக் கொண்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம் அரசாங்க வீரன் ஒருவன் "யாரும் இருந்த இடத்தை விட்டு நகராதீர்கள் நம் அரசரின் கிடம் திருடுபோய் விட்டது. எல்லாரையும் சோதனை போடப் போகிறோம்" என அறிவித்தான். வீரர்கள் பலர் சோதனையைப் போட்டனர். ஒரு வீரன் போதிசத்வரின் வண்டியைச் சோதனை போட்டு அதில் முன்பே ஒளித்து வைக்கப்பட்டிருந்த கிடத்தை எடுத்து "இதோ திருடன். கிடம் அகப்பட்டு விட்டது" எனக் கத்தினான். அரசனும் போதிசத்வர்தான் திருடன் எனக் கூறி அவரது தலையை வெட்டி எறியுமாறு தண்டனை அளித்தான். வீரர்கள் போதிசத்வரைப் பிடித்து சவுக்கால் அடித்து பல தெருக்கள் வழியாக அழைத்துக் கொண்டு கொலைக்களத்திற்குக் கொண்டு போகலாயினர்.
இதைக் கண்ட சுஜாதா அவர் பின்னாலேயே ஓடிக் கண்ணீர் வடித்தவாறே "ஐயோ! நீங்கள் இப்படி அவமானப்பட நான்தான் காரணம். இது எனக்குத் தெரிந்து விட்டது. இந்த அநீதி அடுக்குமா? கடவுளே! என் முறையீட்டைக் கேளாயோ" எனக் கதறினாள். சுஜாதாவின் இந்தப் புலம்பல் தேவலோகத்தையே ஆட்டி உலுக்கியது. தேவேந்திரனும் அதன் காரணத்தைப் புரிந்து கொண்டு தன் சக்தியால் போதிசத்வரை அரசன் இருந்த இடத்தில் அவனது ஆடையிலும் காசி மன்னனை போதிசத்வர் இருந்த இடத்தில் அவரது ஆடைகளைஅணிந்து இருக்கும்படியும் மாற்றம் செய்து விட்டான்.
வீரர்களுக்குத் தாம் பிடித்துச் செல்வது தம் மன்னனைத்தான் என்பது தெரியவில்லை. கொலைக்களத்தில் அரசனின் தலை துண்டிக்கப்பட்ட போதுதான் உண்மை தெரிந்தது. மன்னனின் ஆடைகள் திரும்ப அவனது உடலுக்கு வந்தன. போதிசத்வரின் ஆடைகள் அவரிடமே போய் விட்டன. தம் கொடுங்கோல் மன்னன் ஒழிந்தான் என்பது கண்டு காசி மக்கள் மகிழ்ந்து போய் ஆரவாரம் செய்தனர். இதற்குக் காரணமான போதிசத்வரைக் காண எல்லாரும் கூடி விட்டனர்.
அப்போது தேவேந்திரன் அவர்கள் முன் தோன்றி நடந்ததை எல்லாம் கூறி காசி மன்னன் தன் கெட்ட எண்ணத்தாலேயே அழிந்தான் என்றும் இனி காசியை போதிசத்வரே ஆண்டு வருவார் என்றும் சுஜாதா அவரது பட்டத்து ராணியாக இருப்பாள் எனவும் கூறி எல்லாரையும் ஆசீர்வதித்து விட்டு மறைந்தான். மக்களும் போதிசத்வரைத் தம் மன்னராக ஏற்று அவரது ஆட்சியில் சுக வாழ்வு வாழ்ந்தனர். போதிசத்வரும் சுஜாதாவுடன் சிம்மாசனத்தில் அமர்ந்து நேடுங்காலம் ஆட்சி புரிந்து மக்களை சுகமாக இருக்கச் செய்தார்.
அநீதி அழியும்
பிரம்மதத்தன் காசியை ஆண்டபோது போதிசத்வர் காசிக்கு அருகே இருந்த ஒரு கிராமத்தில் ஒரு பணக்காரனின் மகனாகப் பிறந்தார். அவர் நன்கு படித்துப் பெரியவரானதும் அவரது பெற்றோர் காசி நகரத்தில்உள்ள ஒருவரது மகளான சுஜாதாவைக் கல்யாணம் செய்து வைத்தார்கள். சுஜாதா மிக மிக அழகானவள். நல்ல புத்திசாலியும் கூட. நற்குணங்கள் படைத்தவள். அவள் தன் கணவன் வீட்டிற்கு வந்து இல்வாழ்க்கை நடத்தி யாவருக்கும் பணிபுரிந்து வந்தாள்.
ஒரு நாள் சுஜாதா தன் கணவரிடம் "நானும் இங்கு வந்து வெகு காலம் ஆகிவிட்டது. ஒருமுறை காசிக்குப் போய் என் தாய் தந்தையரைப் பார்த்து விட்டு வர எண்ணுகிறேன். நீங்களும் என்னோடு வந்தால் நன்றாக இருக்கும்" எனக் கூறினாள்.
போதிசத்வரும் "ஆகா, அப்படியே செய்யலாம். உன் தாய் தந்தையரை நானும் ஒரு முறை பார்த்தது போலவும் இருக்கும்" எனக் கூறித் தன் மனைவியோடு மறுநாள் வண்டி கட்டிக் கொண்டு காசிக்குக் கிளம்பினார். போதிசத்வர் முன் அமர்ந்து வண்டியை ஓட்ட சுஜாதா வண்டிக்குள் உட்கார்ந்து கொண்டு காட்சிகளை ரசித்தவாறே இருந்தாள்.
வண்டியும் காசி நகர எல்லையை வந்தடைந்தது. அங்கே ஒரு குளத்தருகே போதிசத்வர் வண்டியை நிறுத்தினார். சுஜாதாவும் கீழே இறங்கி தான் கட்டி எடுத்து வந்த கட்டு சாத மூட்டையை எடுத்துக் கொண்டு போதிசத்வருடன் குளக்கரைக்குப் போய் அமர்ந்தாள். இருவரும் உணவை உண்டு நீர் பருகிச் சற்று இளைப்பாறி விட்டு பிறகு வண்டியில் அமர்ந்து காசி நகருக்குள் செல்லலாயினர். அப்போது காசி மன்னன் யானை மீது அமர்ந்து பவனி வந்து கொண்டிருந்தான்.
அடுத்தவரை குறை கூறும் முன்...
என்குற்ற மாகும் இறைக்கு
விளக்கம்: தன்னிடமுள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குற்றத்தை நோக்கும் தலைவனுக்குக் குறையேதும் ஏற்படாது.”
உடனே பகைவன் தப்பித்து ஓடிவிட, ஒற்றர் தலைவன் சத்துருக்கனன் தன்னைத் தாக்க வருவது மாறுவேடத்திலுள்ள தனது மன்னர்தான் என்று அறியாமல், தன் வாளை உருவிக் கொண்டு அவருருடன் சண்டையிட முற்பட்டான். இதைக் கண்டு ஓடி வந்த சிலர், சத்ருக்கனனுக்குத் துணையாக மன்னருடன் சண்டையிடத் தொடங்க, பலமுனைத் தாக்குதலை சமாளிக்க முடியாமல் மன்னருடைய வாள் கை நழுவி விழுந்தது.
மிகுந்த கோபத்திலிருந்த சத்ருக்கனன், மன்னருடைய கைகளைப் பிடித்துக் கொண்டு “முட்டாளே! காரியத்தைக் கெடுத்து விட்டாயே! பகைவர்களுடைய வீரனை தந்திரமாகப் பேசி இங்கு வரவழைத்து, அவர்களைப் பற்றிய ரகசியங்களை அறியத் திட்டமிட்டிருந்தேன். விஷயம் அறியாமல் நீ குறுக்கிட்டதால் அவன் ஓடி விட்டான். உன்னுடைய அறிவற்ற செயலால் நில்லதொரு வாய்ப்பினை இழந்தோம். மூடனே! யார் நீ?” என்று வசை பாடினான்.
Sunday, July 4, 2010
எறும்பு எக்ஸ்பிரஸ்!
அந்த ரயில் எங்குமே நிற்காது... புற்றிலிருந்து கிளம்பினால் நேரே உணவு இருக்கும் இடம் எவ்வளவு தூரமென்றாலும் சரி 'கூ..கூ... சிக்கு... புக்கு.... சூப்பர்ஃபாஸ்ட்... உணவை தேடி கண்டுபிடித்து... பிறகு உணவை எடுத்து கொண்டு மீண்டும் புற்றை நோக்கி திரும்பும் எறும்பு எக்ஸ்பிரஸ்!
பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் அதே தான் என்ன ஒரு வேகம்..! வழியில் யாராவது குறுக்கே போனால்... அவ்வளவுதான் சிக்கு... புக்கு... உடம்பெல்லாம் ஊசி போட்டு பிடுங்கிவிடும்.
அன்று அந்த எறும்பு எக்ஸ்பிரஸ் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. "சீக்கிரம், ம்..." ராணியாரின் கட்டளைக்குரல் கேட்டுகொண்டே இருந்தது.
"மழைக்காலம் நெருங்கிவிட்டது. இன்னும் புற்றில் நிறைய வேலைகள் இருக்கிறது" என்று பரபரத்து கொண்டிருந்தது. ஏற்கெனவே பல்வேறு தானிய அறைகள் நிரம்பி இருந்தாலும் மேலும் மேலும் எறும்பு எக்ஸ்பிரஸில் உணவுகள் கொண்டு வரப்பட்டு அறைகள் அனைத்தும் தொடர்ந்து நிரப்பப்பட்டு கொண்டேயிருந்தன. பரபரப்புடன் எறும்புகள் இயங்கி கொண்டிருந்தன. அப்போது ஒரு ஜூனியர் எறும்பு மட்டும் ராணியாரை நோக்கி ஒரு கேள்வியுடன் சென்றது.
"மன்னிக்க வேண்டும் ராணியாரே! உங்களிடம் ஒரு முக்கிய கோரிக்கை" என்றது.
தன் முன் நின்று கொண்டிருந்த ஜூனியர் எறும்பை பார்த்த ராணியார் புன்னகைத்தார்...
"மம்... என்ன?" ஆனால் குரலில் மட்டும் கொஞ்சம் கடுமை.
"ராணியார் அவர்களே, ஏற்கெனவே புற்றில் எக்கச்சக்கமாக உணவு கையிருப்பாக இருக்கிறது..." என்றது பேச்சை இழுத்தது ஜூனியர் எறும்பு.
"அது எனக்கும் தெரியும்... அதிகப் பிரசங்கி..." என்று ஆரம்பத்திலேயே குட்டு வைத்தார் ராணியார்.
"இ... இல்லை... மன்னிச்சுடுங்க" என்று ஜூனியர் சமாளிப்பதற்குள், அங்கு மற்ற ஜுனியர் எறும்புகளின் கூட்டமே கூடிவிட்டதையும் ராணியார் கவனிக்க தவறவில்லை.
"ஏன் மேலும் மேலும் தானிய உணவு வந்துகொண்டே இருக்கவேண்டும்... கொஞ்சம் 'ரெஸ்ட்’ எடுக்கலாமே. நாங்க விளையாடக்கூட அனுமதிக்கப் படுவது இல்லை. எங்க அப்பா அம்மாவுக்கு எக்ஸ்பிரஸ் ஓட்ட உதவி செய்தே பொழுதுபோய்விடுகிறது..." என்று கேள்வியை ஒரு வழியாக கேட்டே விட்டது அந்த ஜூனியர் எறும்பு.
"இருப்பதை சாப்பிட்டுவிட்டு பிறகு மறுபடியும் உணவு தேடலாமே?" இது இன்னொரு ஜூனியரின் தைரியக்குரல்.
"அன்பு எறும்புக்குழந்தைகளே..." ராணியார் பரிவுடன் பேசத் தொடங்கினார்.
"நாம் எறும்பு இனத்தை சேர்ந்தவர்கள். மனிதர்களுக்கே சுறுசுறுப்பை கற்றுக்கொடுத் தவர்கள் நாம்தான். உழைக்கும் நேரத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்... அப்போதுதான் ஓய்வுநேரத்தில் நிம்மதியாக இருக்க முடியும். உங்களுக்கு விளக்கமாக ஒரு கதை சொல்கிறேன். கேளுங்கள்" என்று கதை சொல்ல ஆரம்பித்தது ராணியார்கள். ஜூனியர் எறும்புகளும் கதை கேட்க தயாராகின.
"ஒரு காலத்தில் நம் எறும்பு ராஜாவை பார்த்து வெட்டுக்கிளி ஒன்று கேலி செய்தது.
'நான் ஜாலியாக இருக்கிறேன்.ஆனால், நீ மட்டும் எப்போது பார்த்தாலும் உழைத்து கொண்டே இருக்கிறாய். உனக்கே இது அசிங்கமாக இல்லையா..." என்று கூறி பரிகாசித்தது. ஆனால் அதை பொருட் படுத்தாமல் நம் எறும்பு ராஜா உழைத்து உழைத்து புற்றில் உணவு சேர்த்து கொண்டேயிருந்தார்.
ஒருநாள் கடும் மழை பெய்தது. குளிரும் அடித்தது. இதனால் வெட்டுக்கிளி மிகவும் அவதிப்பட்டது. நம் எறும்பு ராஜாவிடம் வந்து, "எறும்பு ராஜா, கொஞ்சம் வெளியே வாருங்கள்" என்று அழைத்தது. வெளியில் வந்த எறும்பு ராஜா, "ராஜா என்று இங்கு யாருமில்லை. எல்லோருமே உழைப்பாளிகள்தான்" என்றது.
"வெளியில் பயங்கர மழையாக இருக்கிறது. சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. நான்கு நாட்களாக நான் பட்டினி... ஆமாம், நீங்க எப்படி சமாளிக்கிறீங்க?!" என்றது வெட்டுக்கிளி.
"மழைக்காலத்துக்கு முன்பு உழைத்து சேர்த்ததை இப்போது சாப்பிட்டு ஓய்வாக நிம்மதியாக இருக்கிறேன்" என்றது எறும்பு ராஜா. எறும்பு கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொள்ளுமாறு வெட்டுக்கிளி எவ்வளவோ கெஞ்சியது. ஆனால், எறும்பு ராஜா மறுத்துவிட்டார்.
இந்த கதையை தான் மனிதர்கள் பள்ளியிலும் தங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து கொண்டிருக்கிறார்கள்" என்று கதை சொல்லி முடித்தது ராணியார். வேறு எதுவும் பேசாமல் ஜூனியர் எறும்புகள் எக்ஸ்பிரஸ் ரயிலை வேகமாக விரட்டி சென்றன
Tuesday, June 22, 2010
உங்களுக்கும் இதுவே!
Monday, December 21, 2009
தேவி பாகவதக் கதைகள் -1
நைமிசாரணியத்தில் இருந்த முனிவர்களுக்கு சூதர் வியாசரிடமிருந்து கேட்ட பல புராணங்களைக் கூறினார். ஒரு நாள் சௌனகர் தேவி பாகவதப் புராணத்தைக் கூறும்படி சூதரிடம் வேண்டினார். சூதரும் அதைக் கூறுவதாகக் கூறி ஆதிபராசக்தியைப் பற்றிக் கூறலானார்.
"தேவி ஆதிபராசக்தி மிகவும் சக்தி வாய்ந்தவன். அவளே கல்வி. உலகமே அவளிடம் அடைக்கலம் அடைந்திருக்கிறது. சிருஷ்டியை அசைய வைப்பவள் அந்த ஆதிபரா சக்தியே. மும்மூர்த்திகளும் அவளின் சைகைப்படி நடக்கிறார்கள். பிரம்மா, விஷ்ணுவின் நாபிஸ்தலத்திலிருந்து அதாவது தொப்புளிலிருந்து பிறந்தார். விஷ்ணு வைத்தாங்குபவன் ஆதி சேஷன். நீரின் ஆதாரத்தில் ஆதி சேஷன் இருக்கிறான். அந்த நீருக்கு ஆதாரம் பராசக்தி. இப்படிப்பட்ட ஆதிபராசக்தியின் கதைதான் தேவி பாகவதம்."
அப்போது சௌனகர் சூதரிடம் "ஒரு முறை பிரம்மா என்னிடம் ஒரு சக்கரத்தைக் கொடுத்து "இதன் இருசு எங்கு உடைகிறதோ அது புனிதமான இடமாக இருக்கும். அங்கு கலி புரு ஷன் வர மாட்டான்" என்றார். சூதரும் மேற்கொண்டு தொடர்ந்தார் இப்போது இருபத்தேழு துவாபர யுகங்கள் கழிந்து இருபத்தெட்டாவது துவாபரயுகம் நடக்கிறது. ஒவ்வொரு துவாரயுகத்திலும் ஒரு வியாசர் பிறந்தார். வேதங்களை அலசி புராணங்களை அளித்த வியாசர் சத்தியவதியின் புதல்வர். |
அவர் தாம் உங்கள் குரு. அவர் தம் மகன் சுகருக்கு தேவி பாகவதத்தைக் கூறுகையில் நான் கேட்டேன்."
அப்போது முனிவர்கள் சூதரிடம் "சுகர் எப்படி வியாசரின் மகனானார்? அவர் அரணிக் கட்டையிலிருந்து பிறந்ததாகச் சிலர் கூறுகிறார்களே. அது சரியில்லையா?" என்று கேட்டார்கள். சுகரும் கூறலானார் "ஒரு முறை வியாசர் சரஸ்வதி நதிக்கரையில் தவம் செய்து கொண்டிருக்கையில் பறவை கள் தம் குஞ்சுகளுக்கு அன்புடன் உணவு ஊட்டிக் கொண்டிருப்பதைக் கண்டார். அப்போது அவர் மனதில் தனக்கும் ஒரு மகன் இருந்தால் வாஞ்சையுடன் அவனை வளர்க் கலாமே என்று அவர் மனதில் பட்டது. அதற்காகத் தவம் செய்து எந்தக் கடவுளிடம் வரம் கேட்கலாம் என்று அவர் யோசித்துக் கொண்டிருக் கையில் நாரத முனிவர் அவர் முன் வந்தார். அவரிடம் வியாசர் தம் எண்ணத்தைக் கூறி எந்தக் கடவுளை நோக்கித் தவம் செய்வது என்று யோசனை கூறச் சொன்னார்.
அதைக் கேட்ட நாரதர் கூறினார் "என் தந்தைக்கு இப்படிப்பட்ட பிரச் சினை ஏற்பட்டது. அவர் விஷ்ணு விடம் சென்று "நான் உங்களை யாவரிலும் உயர்ந்தவராகக் கருதுகிறேன். ஆனால் உங்களையே விட உயர்ந்தவர் யாராவது இருக்கிறாரா?" என்று
விஷ்ணுவும் "உங்களை சிருஷ்டி கர்த்தா என்றும் என்னை எல்லோரையும் காப்பவர் என்றும் சிவனை அழிப்பவர் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. அது தவறு. ஆதிபராசக்தி தான் யாவற்றையும் படைக்கிறாள். அது போலக் காத்தலையும், அழித்தலையும் அவளே செய்கிறாள். நாமெல்லாம் அவளது கருவிகளாகத் தான் இயங்குகிறோம். நான் மதுகைட பர்களுடன் ஐயாயிரம் ஆண்டுகள் போர் புரிந்து அவர்களை வென்றது அந்த தேவியின் சக்தியால்தானே. நீங்கள் ஏதோ உங்களுக்குள்ள சக்தியால் நீங்களே இயங்குவதாக நினைத்துக் கொண்டு விட வேண்டாம். நானும் அது போல நினைக்க முடியாது. ஏனெனில் ஒரு முறை என் வில்லின் நாண் அறுந்து அது தலையை அடித்துத் துண்டித்து விடவே எனக்கு ஒரு குதிரையின் தலையைப்பொருத்த நீங்கள் தானே ஏற்பாடு செய்தீர்கள்? இவ்வாறு சூதர் கூறி வியாசர் ஆதிபராசக்தியை நோக்கித் தவம் புரிந்தார் எனக் கூறி நிறுத்தவே முனிவர்களும் "ஹயக்ரீவர் என்று கூறினீர்களே அவரது கதையைக் கூறுங்கள்" எனவே சூதரும் சொல்லலானார். ஹயக்கிரீவ அவதாரம் முன்னொரு முறை விஷ்ணு பத்தாயிரம் ஆண்டுகள் அசுரர்களுடன் போரிட்டுக் களைத்துப் போய்த் தன் தலைக்கடியில் தன் வில்லை வைத்துக் கொண்டு படுத்திருந்தார். அப்போது தேவர்கள் அவரைக் காண வந்தார்கள். அவர் படுத்து உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு என்ன செய்வது என்று திகைத்தார்கள். பிரம்மாவிடம் சிவனும் "நீங்கள் ஒரு புழுவைச் சிருஷ்டித்து விஷ்ணுவின் வில்லின் நாணில் விட்டு விடுங்கள். அது அந்த நாணைக் கடித்து அறுக்க அப்போது ‘டங்’ என்ற ஒலி கிளம்பும். அதைக் கேட்டு விழித்துக் கொண்டு விடுவார்" என்றார். பிரம்மாவும் புழுவைச் சிருஷ்டித்து விஷ்ணுவின் வில்லின் நாணில் போகச் செய்தார். அந்தப் புழு நாணைக் கடிக்கவே நாண் பெருத்த ஒலியுடன் அறுந்து விடவே வில்லின் முனை விஷ்ணுவின் கழுத் தைத்தாக்கி அவரது தலையைத் துண்டித்து விட்டது. அதைக் கண்ட தேவர்கள் கண்ணீர் வடித்து "உலகத்தையே காக்கும் உங்களுக்கா இந்தக்கதி! மிக்க பலமுள்ள ராட்சஸர்களால் கூட உங்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே. இப்போது எந்த சக்தி உங்களை இப்படிச் செய்தது?" என்று கூறி புலம்பினார்கள். அப்போது தேவகுரு பிரகஸ்பதி "இப்படி நீங்கள் அழுது கொண்டே இருப்பதில் எந்தப் பயனும் இல்லை. இனிமேல் என்ன செய்ய வேண்டும் என்று யோசியுங்கள்" என்று கூறினார். அப்போது தேவேந்திரன் "நாமெல்லாம் பார்த்துக் கொண்டி ருக்கும் போது தானே விஷ்ணுவின் தலை துண்டிக்கப்பட்டது. நம்மால் அதைத் தடுக்க முடியவில்லையே. தேவர்களும் ஆதிபராசக்தியைப் பிரார்த்திக்கவே அவளும் அவர்கள் முன் தோன்றினாள். அவளிடம் தேவர்கள் "தாயே! விஷ்ணுவுக்கு ஏன் இப்ப டிப்பட்ட நிலை ஏற்பட்டது?" என்று கேட்டார்கள். தேவியும் அது பற்றிக் கூறலானாள். "காரணம் இல்லாமல் எதுவும் நடக்காது. ஒரு முறை விஷ்ணு படுக்கையறையில் லக்ஷ்மி தேவியைப் பார்த்து சிரித்தார். அது கண்டு அவள் திகைத்து "இவர் ஏன் சிரித் தார்? என் முகம் விகாரமாகவா இருக்கிறது? என்னை விட அழகானவளை இவர் பார்த்து விட்டாரா?" என எண்ணிக் கோபம் கொண்டாள். அப்போது அவள் விஷ்ணுவின் தலை துண்டாகிக் கடலில் விழ வேண்டுமென சபித்தாள். அந்த சாபத்தின் பயனாகத் தான் இப்படி நடந்தது. இதற்கு முன் ஹயக்கிரீவன் என்ற ராட்சஸன் என்னைக் குறித்துத் தவம் செய்தான். ஆயிரவருடம் அவன் தவம் செய்தபின் தான் அவன் முன் நான் தோன்றினேன். அவனுக்கு என்ன வரம் வேண்டும் என்று நான் கேட்கவே அவன் தனக்கு யாராலும் மரணம் ஏற்படக் கூடாது என்று கோரினான். நானோ பூமியில் பிறந்தவன் என்றாவது இறந்து தானாக வேண்டும் என்றிருப்பதால் இதை அளிக்க முடியாது, அதனால் வேறு ஏதாவது வரம் கேள் என்றேன். அப்போது அவன் தான் ஹயக்கிரீவனாதலால் ஹயக்கிரீவன் கையாலே தான் தனக்கு மரணம் ஏற்பட வேண்டும் என்ற வரத்தைக் கேட்கவே அதை அளித்தேன். இப்போது அவன் உலகத்தையே துன் புறுத்தி வருகிறான். மூவுலகிலும் அவனைக் கொல்லக் கூடியவர் யாருமே இல்லாது போயினர். அதனால் ஒரு குதிரையின் தலையைக் கொண்டு விஷ்ணுவின் உடலில் பொருத்துங்கள். இந்த ஹயக்கிரீவர் ராட்சஸனான ஹயக்கிரீவனைக் கொல்வார்" என்று கூறி மறைந்தாள் ஆதிபராசக்தி. தேவர்கள் விசுவகர்மாவிடம் ஒரு குதிரைத்தலையைச் செய்து கொண்டு வரும்படி கூறினார்கள். விசுவகர் மாவும் அதனைச் செய்து விஷ்ணுவின் உடலில் பொருத்தினார். இந்த ஹயக்கிரீவர் ராட்சஸ ஹயக்கிரீவனைக் கொன்று உலக மக்களை நிம்மதியாக வாழச்செய்தார்.
மது கைடபர்கள்
ஹயக்கிரீவ அவதாரக்கதையைக் கேட்டபின் முனிவர்கள் சூதரிடம் மது கைடபர்களைப் பற்றிக் கூறும்படி வேண்டவே அவரும் கூறலானார். பாற்கடலில் சேஷநாகத்தின் மீது படுத்து உறங்கிக் கொண்டிருந்த மகா விஷ்ணுவின் இருகாதுகளிலிருந்து மதுவும் கைடபனும் பிறந்து பாற் கடலில் விழுந்து நீந்தியவாறே தாம் எப்படி பிறந்தோம் என்று யோசித்தார்கள்.
அப்போது கைடபன் மது விடம் "நமக்கும் கடலுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது" என்றான். அப்போது ஆகாயத்திலிருந்து யாரோ ஒருவர் கூறிய ஒரு சொல் அவர் கள் காதில் விழவே அதை அவர்கள் ஜெபிக்கலானார்கள். திடீரென ஒரு மின்னல் வெட்டவே அந்த இரு ராட்சஸர்களும் அதைக் கண்டு அது ஆதி பராசக்தி என எண்ணி தேவியைக் குறித்துத் தவம் செய்தார்கள்.
அவர்களது தவம் ஆயிரம் ஆண்டுகள் நடந்து முடியவே தேவியும் அவர்கள் முன் தோன்றினாள். அவர்கள் தமக்குத் தாம் விரும்பும் போது மரணம் ஏற்பட வேண்டுமென்ற வரத்தைப் கோரவே, தேவியும் அதனைக் கொடுத்து விட்டு மறைந்தாள்.
அதன் பின் அவர்கள் கடலில் சஞ்சரித்தவாறே பிரம்மாவைத் தம்முடன் போர் புரிய அழைத்தனர். பிரம்மா பயந்து யோக நிஷ்டையில் அமர்ந் துள்ள விஷ்ணுவைக் கண்டு "இரு ராட்சஸர்கள் என்னைக் கொல்ல வரு கிறார்கள். என்னைக் காப்பாற்ற வேண்டும்" என்று வேண்டினார். விஷ்ணுவோ யோக நிஷ்டையி லிருந்து எழாததால் அவர் ஆதிபரா சக்தியைப் பிரார்த்தித்தார். தேவி விஷ்ணுவை நிஷ்டை கலைந்து எழுந்து வரும்படிச் செய்தாள். அது கண்டு பிரம்மா மகிழ்ந்து போனார் (தொடரும்)
| ||||
Friday, October 9, 2009
கடவுள் கொடுத்த பயங்கரமான வரம்!
ஒருநாள் திடீரென அந்த மான் காணாமல் போனது. பிரியமாக வளர்த்து வந்த மானைக் காணாமல் அங்குமிங்கும் தேடி அலைந்தான். எங்கு தேடியும் கிடைக்காததால், கடும் கோபம் கொண்டான். "மானைக் கடத்தியவன் யாராக இருந்தாலும் அவனை சும்மா விட மாட்டேன்" என சபதம் போட்டான். கடத்தியவனைக் கண்ணில் காட்டும் படி கடவுளிடம் உருகி வேண்டினான்.
அடுத்த நிமிடமே கடவுள் அவனுக்கு காட்சியளித்தார். "பக்தா.. உன் மான் காணாமல் போனதற்கு வருந்துகிறேன். உனக்கு என்ன வேண்டும்?" என்றார்.
"எனது மான் காணாமல் போக யார் காரணமோ, அவர்களை என் கண் முன்னால் காட்டுங்கள். அவனுக்கு என் கையால் தண்டனை அளிக்க வேண்டும்" என ஆவேசமாகக் கூறினான்.
"பாசத்தை விட கோபம் அதிகமாக இருக்கக் கூடாது பக்தா. உன் மானைக் கேள், அல்லது பொன் பொருள் என எது வேண்டுமானாலும் கேள், தருகிறேன். உன் கோபத்தால் சிக்கலில் மாட்டுவாய்" என்றார்.
ஆனால் அவன் கேட்பதாக இல்லை. "என்ன ஆனாலும் சரி, அவனை என் கண்முன்னே நிறுத்துங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவது உங்கள் கடமையல்லவா.." என கத்தினான். | ||
|


